Retina Careவிழித்திரை சிகிச்சை
Advanced diagnosis and treatment for retinal conditions, protecting your vision with precision.விழித்திரை குறைபாடுகளுக்கான மேம்பட்ட பரிசோதனை மற்றும் துல்லியமான சிகிச்சைகள் மூலம் உங்கள் பார்வையைப் பாதுகாத்தல்.
What is happening to your vision? உங்கள் பார்வைக்கு என்ன நடக்கிறது?
Think of the retina as the film in a camera. It is the light-sensitive tissue at the back of your eye that captures images and sends them to your brain. If the retina is damaged, the image sent to the brain will be blurry or distorted, regardless of how clear the front of the eye is. விழித்திரையை ஒரு கேமராவின் பிலிம் (film) போல நினைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் கண்ணின் பின்பகுதியில் உள்ள ஒளியை உணரும் திசுவாகும், இது படங்களை படம்பிடித்து உங்கள் மூளைக்கு அனுப்புகிறது. விழித்திரை பாதிக்கப்பட்டால், கண்ணின் முன்பகுதி எவ்வளவு தெளிவாக இருந்தாலும், மூளைக்கு அனுப்பப்படும் படம் மங்கலாகவோ அல்லது சிதைந்தோ இருக்கும்.
Common Retinal Conditionsபொதுவான விழித்திரை குறைபாடுகள்
- Diabetic Retinopathy சர்க்கரை நோய் விழித்திரை பாதிப்பு
- Age-Related Macular Degeneration (ARMD) வயது முதிர்வால் ஏற்படும் விழித்திரை சிதைவு
- Retinal Tears and Detachments விழித்திரை கிழிசல் மற்றும் விலகல்
- Hypertensive Retinopathy உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் விழித்திரை பாதிப்பு
Advanced Diagnostics & Treatment மேம்பட்ட நோயறிதல் மற்றும் சிகிச்சை
Early detection is crucial for treating retinal conditions. At Shri Andavar Eye Care, we use state-of-the-art imaging technology to view the retina in microscopic detail, allowing us to catch and treat issues early. விழித்திரை குறைபாடுகளுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிப்பது மிகவும் முக்கியம். ஸ்ரீ ஆண்டவர் ஐ கேரில், விழித்திரையை நுண்ணிய அளவில் பரிசோதிக்க அதிநவீன ஸ்கேன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறோம். இதன்மூலம் கண் சார்ந்த பிரச்சனைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.
OCT Scans OCT ஸ்கேன்
Optical Coherence Tomography (OCT) provides highly detailed, cross-sectional 3D images of the retina to spot early signs of damage. ஆப்டிகல் கோஹரன்ஸ் டோமோகிராபி (OCT) ஆனது விழித்திரையின் மிகத் துல்லியமான, 3D குறுக்குவெட்டுப் படங்களை வழங்கி, விழித்திரை பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகிறது.
Specialized Laser Treatments சிறப்பு லேசர் சிகிச்சைகள்
We utilize precision retinal lasers (photocoagulation) to treat retinal tears, diabetic retinopathy, and protect long-term vision. விழித்திரை கிழிசல்கள், சர்க்கரை நோய் விழித்திரை பாதிப்பு ஆகியவற்றிற்குச் சிகிச்சை அளிக்கவும், நீண்டகாலப் பார்வையைப் பாதுகாக்கவும், துல்லியமான விழித்திரை லேசர் (photocoagulation) சிகிச்சைகளைப் பயன்படுத்துகிறோம்.
Opposite LMHSS School, Palladam Road LMHSS பள்ளிக்கு எதிரில், பல்லடம் சாலையில்
A familiar landmark makes us easy to find. If you know LMHSS School, you’ll know exactly where we are.
Visit us for your eye care needs. LMHSS பள்ளி பொள்ளாச்சியில் அனைவருக்கும் தெரிந்த ஒரு முக்கிய அடையாளம். பள்ளிக்கு நேராக எதிரிலேயே எங்கள் மருத்துவமனை அமைந்துள்ளது.
உங்கள் கண் சிகிச்சைத் தேவைகளுக்கு எங்களை அணுகவும்.
Opposite LMHSS School,
T. Kottampatti, Pollachi – 642002எண். 73, பல்லடம் சாலை,
LMHSS பள்ளிக்கு எதிரில்,
T. கொட்டாம்பட்டி, பொள்ளாச்சி – 642002
Sunday closedதிங்கள்–சனி · காலை 10:00 – மதியம் 2:00 மற்றும் மாலை 5:00 – 7:00
ஞாயிறு விடுமுறை

